ஸ்ரீலங்கன் விமான சேவையின் பங்குகளின் 51 வீதத்தை விற்பனை செய்ய கடந்த அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை நிறுத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தீர்மானித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் பங்குகளை விற்பனை செய்ய அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு பிரிவு நடவடிக்கை எடுத்திருந்தது. இதற்கமைய, தனியார் முதலீட்டாளர்களை இணைத்து கொள்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஸ்ரீலங்கன் விமான சேவையின் பங்குகளின் 51 வீதத்தை விற்பனை செய்ய கடந்த அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை நிறுத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தீர்மானித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற புதிய அரசாங்கத்தின முதலாவது அமைச்சரவை கூட்டத்தின் போதே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, குறித்த திட்டத்தை கைவிட்டு ஸ்ரீலங்கன் விமான சேவையின் முகாமைத்துவத்தை செயற்திறன் மிக்கதாக மாற்றுவது தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தினால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.