”சிறுவர்களின் உள, சமூக வளர்ச்சியைத் தடுக்கும் காரணிகள் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையிலான கல்வி முறைமையிலிருந்து இளம் தலைமுறையினரை விடுவிப்பதே, மறுமலர்ச்சிக் கால பணியின் இலக்காகும்” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துச் செய்தியில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது” மனித நேயம், பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்குத் தேவையான அரசியல் மாற்றத்தை முன்னெடுப்பதற்கும், சுற்றாடலைப் பாதுகாப்பதற்கும் நாம் முன்னுரிமை அளிக்கவுள்ளோம்.
அத்தோடு, சிறார்களுக்கே உரித்தான குழந்தைப் பருவ உலகத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
சிறுவர்களின் உள, சமூக வளர்ச்சியைத் தடுக்கும் காரணிகள் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையிலான கல்வி முறைமையிலிருந்து இளம் தலைமுறையினரை விடுவிப்பதே, மறுமலர்ச்சிக் கால பணியின் இலக்காகும்” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.