எவரெஸ்ட் சிகரம் பல ஆண்டுகளாக மெதுவாக உயரமாக வளர்ந்து வருவதாக அண்மைய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 8,849 மீட்டர் உயரத்தில் உள்ள எவரெஸ்ட் இமயமலையின் மற்ற பெரிய சிகரங்களை விட சுமார் 250 மீட்டர் உயரம் கொண்டது.
இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 மி.மீ வளர்ந்து வருகிறது.
சோமோலுங்மா என்றும் அழைக்கப்படும் எவரெஸ்ட் சிகரம், கடந்த 89,000 ஆண்டுகளில் எதிர்பார்த்ததை விட சுமார் 15 முதல் 50 மீட்டர் (50 முதல் 164 அடி) வரை உயர்ந்துள்ளது என்று திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
லண்டன் பல்கலைக்கழக கல்லூர ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இப்பகுதியில் ஓடும் ஆறுகளால் மலை அடிவாரத்திற்கு கீழே உள்ள பாறைகள் பல ஆண்டுகளாக அரிக்கப்பட்டு வருவதால் இந்த வளர்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இமாலய மலைத்தொடரின் ஒரு பகுதியான எவரெஸ்ட் சிகரம், நேபாள-திபெத் எல்லையில் சுமார் 8,850 மீட்டர் (29,000 அடி) உயரத்தில் உள்ளது.
அருகிலுள்ள K2 சிகரம் 8,611 மீ உயரம் கொண்டது. இமயமலையில் உள்ள மற்ற மூன்று உயரமான மலைகள் 8,586 மீற்றர், 8,516 மீற்றர் மற்றும் 8,485 மீற்றர் உயரங்களை கொண்டது.