காலி, அஹங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயோதிப தம்பதியர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களது வீட்டிலிருந்து இன்று (04) அதிகாலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
வீட்டில் இருவரும் பலத்த காயங்களுடன் உயிரிழந்திருப்பதை அவதானித்த, அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
67 வயதுடைய ஆணும், 63 வயதுடைய பெண்ணுமே சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் ஆவர்.
பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் அவர்கள் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டமை தெரியவந்துள்ளது.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.