சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு 35.3% வரை வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் வெள்ளிக்கிழமை (04) தீர்மானித்தது.
இது ஆசிய நிறுவனத்துடன் நீடித்த வர்த்தகப் போருக்கு களம் அமைக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ், போலந்து உள்ளிட்ட நாடுகள் இந்த கட்டணத்தை ஆதரிப்பதாக தெரிவித்திருந்தன.
எனினும் ஜேர்மனி, ஹங்கேரி, மொல்டா, ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுடன் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகப் பிரிவானது, இறக்குமதி வரிகள் எதிர்வரும் நவம்பர் தொடக்கத்தில் புதிய வரிகள் நடைமுறைக்கு வருமா என்பதை முடிவு செய்யும்.