அரிசியில் செயற்கை தவிட்டு சாயம் கலந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மில் உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
சுதுமலை பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் திடீர் பரிசோதனையை மேற்கொண்ட வேளை, செயற்கை தவிட்டு சாயங்கள் கலந்த ஒரு தொகை அரிசியினை கடந்த ஆகஸ்ட் மாதம் மீட்டிருந்தார்.
மீட்கப்பட்ட அரிசி மாதிரிகளை மேலதிக பரிசோதனை நடவடிக்கைக்காக அநுராதபுரத்தில் உள்ள அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பரிசோதனையில், அரிசியில் சாயம் கலக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
அதன் பிரகாரம் குறித்த அரிசி ஆலை உரிமையாளருக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையில் உரிமையாருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.