எதிர்வரும் நவம்பர் 14, அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையில்,
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் தமது சொத்துப் பிரகடனங்களை வேட்புமனுவுடன் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, தேசியப் பட்டியல் வேட்புமனுக்களை கோருபவர்களும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.