அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்த குமார இன்று தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.
அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே ஓய்வு பெற்றதையடுத்து, பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்த குமார அண்மையில் அதன் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்
இதேவேளை மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மேலும் சேவை நீட்டிப்பு இல்லாமல் ஓய்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது