கோவை அவிநாசிசாலையில் உள்ள தனியார் பாடசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை மின்னஞ்சல் மூலம் குறித்த பாடசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் பாடசாலை நிர்வாகம் உடனடியாக பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரும் வெடிகுண்டுத் தடுப்புப் பிரிவினரும் பாடசாலையில் சோதனையில் ஈடுபட்டனர்.
அதேசமயம் பாடசாலை மாணவர்கள் அனைவரும் பாடசாலை வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு மைதானத்தில் அமர வைக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி எனவும் இது குறித்த விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.