ஜப்பானில் பொது மக்களுக்கு வேலை பெற்றுத் தருவதாக கூறி 1.3 மில்லியன் ரூபாவை நிதி மோசடி செய்த நபர் ஒருவர் ஹொரனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் 31 வயதுடைய நபர் ஆவார்.
இரத்தினபுரியை வசிப்பிடமாகக் கொண்ட நபருக்கு எதிராக நான்கு பொலிஸ் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது.
ஹொரனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நபர் வெள்ளிக்கிழமை (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹொரண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.