அமெரிக்காவைத் தாக்கிய ஹெலீன் புயலால் ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 227 ஆக உயர்வடைந்துள்ளது.
கரீபியன் கடற்பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அதிதீவிர புயலாக உருமாறி, அமெரிக்காவில் பல இடங்களைத் தாக்கியுள்ளது.
ஹெலீன் என்று பெயரிடப்பட்ட குறித்த புயல், கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை தாக்கியது.
இதனையடுத்து வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, ஜியார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களும் புயல் தாக்கத்திற்கு உள்ளானது.
இப் புயல் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மழை பெய்தமையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், புயல் தாக்கம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 227 ஆக உயர்வடைந்துள்ளது.
தற்போது குறித்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.