நான்கு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான நவோமி ஒசாகா (Naomi Osaka), பீஜிங்கில் நடந்த சீன ஓபனில் இருந்து ஓய்வு பெற காரணமான காயத்தால் அடுத்த வாரம் தனது சொந்த ஜப்பான் ஓபனில் இருந்து விலகினார்.
“காயம் காரணமாக, நவோமி ஒசாகா ஒக்டோபர் 14-20 வரை ஒசாகா நகரில் WTA 250 போட்டியில் பங்கேற்க மாட்டார்” என்று ஜப்பான் டென்னிஸ் சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் பீஜிங்கில் நடந்த சீன ஓபனில் மூன்று வெற்றிகளைப் பதிவு செய்த 26 வயதான முன்னாள் உலக நம்பர் 1 வீராங்கனை தொடரில் நல்ல ஆரம்பத்துடன் இருந்தார்.
எனினும், கோகோ காஃப்க்கு எதிரான போட்டியில், ஒசாகா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது செட்டின் முடிவில் ஓய்வு பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.