நவராத்திரியின் ஆறாம் நாள் அம்மனை இந்திராணியாகவும், சண்டிகா தேவியாகவும், நவ துர்க்கையில் காத்யாயிணி தேவியாகவும் வழிபாடு செய்ய வேண்டும்.
அன்றைய தினத்தில் நாம் அணிய வேண்டிய ஆடையின் நிறம் கிளி பச்சை நிறம். இந்த நிறத்தில் உள்ள துணியை வாங்கி தான் வீட்டிற்கு வரக்கூடிய சுமங்கலி பெண்களுக்கு தர வேண்டும்.
இந்த நாளில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் வழிபாடு செய்யலாம் அல்லது காலை 6:00 மணியிலிருந்து 9:00 மணிக்குள் செய்யலாம் அல்லது காலை 10:45 மணியிலிருந்து 11:45 மணி வரை செய்யலாம் அல்லது மாலை 5 30 மணியிலிருந்து 9:30 மணி வரை இந்த வழிபாட்டை செய்யலாம்.
கொலு வைத்திருப்பவர்கள் காலையிலும் வழிபாடு செய்ய வேண்டும் மாலையிலும் வழிபாடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்றைய தினத்தில் நாம் அம்மனுக்கு கிளி பச்சை நிறத்திலான புடவையை சாற்றி வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அன்றைய தினத்தில் நாம் அம்மனுக்கு அலங்காரம் செய்வதற்கு உபயோகப்படுத்தக்கூடிய மலர்கள் ஜாதிமல்லி மற்றும் செம்பருத்தி பூ. சந்தன இலை கிடைக்கும் பட்சத்தில் அந்த இலைகளை வைத்து அம்மனுக்கு அர்ச்சனை செய்தால் பணவரவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
அன்றைய தினத்தில் நாம் அம்மனுக்கு தேங்காய் சாதம், வேர்க்கடலை சுண்டல் போன்றவற்றை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.
இதை தவிர்த்து வேறு எந்த பொருட்களை வேண்டுமானாலும் கூடுதலாக நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்யலாம்.
மேலும் அன்றைய தினத்தில் நாம் அம்மனுக்கு நெய்வேத்தியமாக வைக்கக்கூடிய பழங்கள் நார்த்தம் பழம்.
நார்த்தம் பழம் கிடைப்பது என்பது கடினம் என்பதால் கிடைக்காத பட்சத்தில் திராட்சை பழத்தை வைத்து வழிபாடு செய்யலாம்.
இந்த திராட்சை பழம் பச்சை நிறத்தில் இருப்பது மிகவும் உத்தமம்.
இவ்வாறு வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய காரிய தடைகள் அனைத்தும் நீங்குவதுடன், நம்முடைய பாவங்களும் தொலையும்.