பணய கைதிகளை எல்லோரையும் ஹமாஸ் அமைப்பு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணையும் வரை அமெரிக்கா ஓய போவதில்லை என அமெரிக்க வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்
இதேவேளை அவர்களில் 7 அமெரிக்கர்கள் உள்பட 101 பேர் இன்னும் காசாவிலேயே உள்ளனர் எனவும் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு தொடங்கிய போரால், பாலஸ்தீனிய மக்கள் தொடர்ந்து இன்றும் அதன் விளைவுகளை சந்தித்து வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பணய கைதிகளை வீட்டுக்கு திரும்ப கொண்டு வருவதற்கான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக, தொடர்ந்து பணியாற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இதனால், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய மக்கள் பாதிப்பில் இருந்து விடுபடுவதுடன், போரும் ஒரு முடிவுக்கு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்