5 பெண்கள் மற்றும் 51 ஆண்கள் உட்பட மொத்தம் 56 பாகிஸ்தான் பிரஜைகள் திங்கட்கிழமை (07) இலங்கையில் இருந்து பாகிஸ்தான் திரும்பியுள்ளனர்.
பிரத்யேகமாக வாடகைக்கு எடுக்கப்பட்ட விமானத்தில் குழுவினர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த பல ஆண்டுகளாக இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்ட இவர்கள், மே மாதம் மற்றும் ஜூலை மாதம் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி மற்றும் இலங்கை உயர் ஸ்தானிகர் ரவீந்திர சந்திரசிறி விஜேகுணரத்ன ஆகியோருக்கு இடையேயான சந்திப்புகளின் விளைவாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் மத்திய தனியார்மயமாக்கல் அமைச்சர் அப்துல் அலீம் கான் கைதிகள் திரும்புவதற்கான அனைத்து செலவுகளையும் தாராளமாக ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.