ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவிக்கு பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றும் எம்.எஸ்.பீ. சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைவாகவே அமைச்சரவை குறித்த அங்கீகாரத்தை வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.