யாழில் பெருந்தொகையான நாணயத் தாள்களையும் மோட்டார் சைக்கிளொன்றையும் தீயிட்டுக் கொளுத்தியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் அராலி பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் நேற்றைய தினம் ஒரு தொகைப்பணத்துடன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று வட்டுக்கோட்டை பகுதியில் 5ஆயிரம் ரூபாய் தாள்கள் சிலவற்றை வீசியுள்ளார்.
பின்னர் தனது வீடு நோக்கி திரும்பியவர் வீட்டுக்கு அருகில் இருந்த மோட்டார் சைக்கிளொன்றையும் தன் கைவசம் இருந்த மிகுதி பணத்தினையும் வீதியில் போட்டு தீ வைத்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் குறித்த நபரின் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.