வட கொரியாவின் இராணுவம் புதன்கிழமை (09) முதல் தென் கொரியாவுடன் இணைக்கப்பட்ட வீதிகள் மற்றும் ரயில் பாதை போக்குவரத்தினை முற்றிலுமாக துண்டித்து.
தனது எல்லையில் உள்ள பகுதிகளின் பாதுகாப்பினை பலப்படுத்தும் நோக்குடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடகொரிய அரச செய்தி நிறுவனமான KCNA தெரிவித்துள்ளது.
மேலும், கொரிய மக்கள் இராணுவம், இந்த நடவடிக்கையை “போரைத் தடுப்பதற்கான ஒரு தற்காப்பு நடவடிக்கை” என்று விவரித்தது.
இரு கொரிய நாடுகளுக்கு இடையிலான பதட்டங்கள் பல ஆண்டுகளாக மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.