”மலையக சமூகத்தின் உரிமைகளை ஓங்கிப் பேசும் குரலாக ஐக்கிய ஜனநாயகக் குரல் காணப்படும்” என வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் களமிறங்குவதற்காக ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் புதியக் கட்சி, கொழும்பில் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
பிரபல நடிகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரன்ஜன் ராமநாயக்க தலைமையிலான இந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான திலகரத்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
அந்தவகையில் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே வடிவேல் சுரேஷ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.