இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான வரைவுத் தீர்மானம் வாக்கெடுப்பின்றி ஐ. நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான 57 இன் கீழ் 1 தீர்மான வரைவு வாக்கெடுப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 57வது கூட்டத்தொடரில் குறித்த தீர்மான வரைவு நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த வரைவை சம்பந்தப்பட்ட நாடு என்ற வகையில் இலங்கை எதிர்க்கும் என அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அறிவித்திருந்தார்.
இதனடிப்படையில் இலங்கை அதன் உத்தியோகப்பூர்வ நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையும் நிலையான அரசாங்கத்தின் ஊடாக மனித உரிமையை நிலைநாட்டும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
எந்தவொரு இறையாண்மை அரசும் அதன் அரசியலமைப்புக்கு முரணாக இயங்கும் மற்றும் அதன் உள்நாட்டு சட்ட செயல்முறைகளின் அர்ப்பணிப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் வெளிப்புறப் பொறிமுறையின் மேலெழுதலை ஏற்றுக்கொள்ளாது என அறிவித்துள்ளது.
இந்தப் பொறிமுறையின் வரவுசெலவுதிட்ட தாக்கங்கள் குறித்துப் பல நாடுகள் ஏற்கனவே அதிருப்தி வெளியிட்டுள்ளன.
எனவே 51இன்று கீழ் 1 பரிந்துரையின் நிர்ப்பந்தத்தை நீடிக்கக் கோரி முன்வைக்கப்பட்டுள்ள வரைவு பரிந்துரையை நிராகரிப்பதற்கு தாம் கடமைப்பட்டுள்ளதாகவும் இலங்கை சார்பில் அமர்வில் பங்கேற்ற ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி அருணாதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.