எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் அரசாங்கத்துடன் இணைந்து தேசத்தை மீளக் கட்டியெழுப்ப தன்னால் இயன்ற உதவிகளை வழங்கியதாகவும், ஆனால் பொதுமக்களுக்கு மாற்றம் தேவை என்பது புலனாகிறது என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்திலும் பாராளுமன்றத்திலும் மாற்றத்திற்கான மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளிப்பதாகக் கூறிய அவர், பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.
அதற்கு பதிலாக, தன்னை முன்னர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்த அநுராதபுர மக்களுக்கு சேவை செய்வதில் தான் பணியாற்றுவேன்.
எவ்வாறெனினும், எதிர்காலத்தில் தேசத்திற்கு தேவைப்படும் போதெல்லாம் தனது நிபந்தனையற்ற உதவிகளை வழங்குவதாக ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டினார்.