கொலராடோ நிலத்தடி தங்கச் சுரங்கத்தில் சிக்கியிருந்த 12 சுற்றுலாப் பயணிகள் பல மணி நேர போராட்டத்தின் பின்னர் வெற்றிகரமாக மீட்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த மீட்பு பணியில் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனியாருக்குச் சொந்தமான சுற்றுலாத் தலமான கிரிப்பிள் க்ரீக்கில் உள்ள மோலி கேத்லீன் தங்கச் சுரங்கத்தில் இந்தக் குழு சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தபோது, பளுதூக்கி பழுதடைந்தமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
மீட்பு பணியில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் மீட்கப்பட்டனர். நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
ஒரு மணி நேர சுற்றுப்பயணம் சுற்றுலாப் பயணம் 1,000 அடி (305 மீ) தொலைவில் பைக்ஸ் பீக்கின் தென்மேற்குப் பகுதிக்கு அழைத்துச் செல்கிறது என்று சுற்றுலா நிறுவனத்தின் இணையதளத்தில் சுற்றுலா தொடர்பாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த சுற்றுலா தலமானது 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.