கம்பஹா படல்கம பிரதேசத்தில் உள்ள கார்பன் உற்பத்தி தொழிற்சாலையில் இன்று காலை இடம்பெற்ற வெடிவிபத்தில் 19 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி கொதிகலன் அதிக வெப்பம் காரணமாக வெடித்து சிதறியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் படுகாயமடைந்தவர்கள் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


















