உபாதைக்கு பின்னர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் செவ்வாயன்று (15) முல்தானில் ஆரம்பமாகும் பாகிஸ்தானுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார்.
கிறிஸ் வோக்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோருக்குப் பதிலாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் மெத்யூ பாட்ஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பென் ஸ்டோக்ஸ் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட சொந்த தொடரிலும், கடந்த வாரம் பாகிஸ்தானின் முதல் டெஸ்டிலும் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
33 வயதான அவர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் மூன்று டெஸ்ட்களிலும் விளையாடினார், ஜூலையில் அவரது அணி 3-0 என வென்றது.
இந்த தொடரின் போது, பென் ஸ்டோக்ஸின் தொடை தசையில் காயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக அவர், இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட சொந்த தொடரிலும், கடந்த வாரம் நடைபெற்ற பாகிஸ்தானினுக்கு எதிரான முதல் டெஸ்ட்டிலும் விளையாடவில்லை.
இந்த நிலையில் நாளை ஆரம்பமாகும் போட்டியில் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.
இதேவேளை, முதல் போட்டியின் படுதோல்விக்கு பின்னர், முன்னாள் தலைவர் பாபர் அசாம் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் நசீம் ஷா மற்றும் ஷாஹீன் ஷா அப்ரிடி ஆகியோரை நீக்கிய பாகிஸ்தான் அணி, அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது.