இந்தியாவில் நடைபெறும் ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் தேசிய அணி நேற்று (14) விளையாட்டுத்துறை அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரியவை சந்தித்தது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, அணியினருடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், போட்டியில் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார்.
ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக 14 ஆசிய நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த ஆண்டுக்கான போட்டியின் தொடக்க விழா ஒக்டோபர் 17 ஆம் திகதி மாலை 3:00 மணிக்கு நடைபெறும் மற்றும் போட்டிகள் ஒக்டோபர் 18 முதல் 27 வரை இந்தியாவின் பெங்களூரில் நடைபெறும்.