கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறியீடு 1.2 சதவீத வளர்ச்சியைக் காட்டியுள்ளது.
2023 ஆகஸ்டில் 90.2 ஆக இருந்த தொழில்துறை உற்பத்தி குறியீடு, இந்த ஆண்டு ஆகஸ்டில் 91.3 ஆக உயர்ந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில், உணவு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறெனினும், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பானங்கள் மற்றும் புகையிலை தொடர்பான பொருட்கள் உற்பத்தியில் வீழ்ச்சி காணப்பட்டும் உள்ளது.
இதற்கிடையில், ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு சற்று குறைந்துள்ளது.
ஜூலை மாதத்தில் 16,373 ரூபாவாக இருந்த வறுமைக் கோடு ஆகஸ்ட் மாதத்தில் 16,152 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் கூறியுள்ளது.