களுத்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் களுத்துறையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரத இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த தீ விபத்தினால் கரையோர மார்க்கத்தில் புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி இன்று மட்டக்களப்பில் இருந்து கோட்டை நோக்கி பயணித்த மீனகயா நகரங்களுக்கு இடையிலான புகையிரதம் இயந்திரம் இவ்வாறு தடம் புரண்டதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.