இணையவழி நிதி மோசடி தொடர்பாக அண்மையில் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகள் குறித்து கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி இணையவழி நிதி மோசடி தொடர்பாக அண்மையில் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகளின் உரிமைகள் மற்றும் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதுடன், இலங்கை சட்ட விதிமுறைகளுக்கு இணங்க அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விடயம் தொடர்பாக சீனா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இந்த சம்பவம் இரு நாட்டு மக்களின் சொத்துக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமல்லாமல், சீனாவின் நற்பெயரை கடுமையாக பாதிப்பதாகவும், இரு நாடுகளுக்கிடையேயான பாரம்பரிய நட்புறவை பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
சந்தேக நபர்களை சட்டப்படி அவர்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சீனத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.