நாடு முழுவதும் தொடரும் சீரற்ற காலநிலையால் உண்டான அனர்த்தங்களில் மொத்தம் 35,391 குடும்பங்களைச் சேர்ந்த 137,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவலின் படி, அனர்த்தங்களினால் மூவர் உயிரிழந்தும், இருவர் காயமடைந்தும் உள்ளனர்.
அதேநேரம், ஒரு வீடு முழுமையாகவும், 344 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
2,222 குடும்பங்களைச் சேர்ந்த 9,591 நபர்கள் பாதுகப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, வெள்ள நீர் வடிந்து செல்வதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வயிற்றுப்போக்கு, வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல் மற்றும் புழு நோய்கள் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால், கூடிய விரைவில் மருத்துவ சிகிச்சை பெறுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.