அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாரில்லை என்றும் தனது ஓய்வு தற்காலிகமானது என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் ஒருபோதும் ஓய்வு பெறமாட்டார்கள்.
எனினும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. இது ஒரு தற்காலிக முடிவு என்றும் தெரிவித்த அவர், எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பெரும்பான்மை வாக்குகளைப் பெறும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.