அமெரிக்காவின் தெற்கு மாநிலமான மிசிசிப்பியில் புதன்கிழமை (16) பிற்பகல் ஒரு பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்து எப்படி நடந்தது என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
ஒரு மாதத்திற்கு முன்பு மூடப்பட்ட இந்தப் பாலம் இடிப்பதற்கு ஒரு பணிக்குழு தயாராகிக்கொண்டிருந்தபோது இடிந்து வீழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.