தெலுங்கானாவின் சிவம்பேட்டையில், கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியதில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமியர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரத்தினபுரி தாண்டா கிராமத்தைச் சேர்ந்த 8 பேர் சித்திப்பேட்டில் உள்ள உறவினர் வீட்டின் சுப நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.