ஹிங்குராங்கொட மற்றும் கல் ஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் எரிபொருள் ரயில் ஒன்று காட்டு யானைகள் மீது மோதுண்டு தடம் புரண்டுள்ளது.
இதனால், மொத்தம் நான்கு பெட்ரோல் டேங்கர்கள் தடம் புரண்டதாகவும், அவற்றில் இரண்டு கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல யானைகள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ரயில் தடம் புரண்டதன் காரணமாக குறித்த மார்க்க மூடான ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ரயில் பாதையும் பாரியளவில் சேதத்துக்குள்ளாகியுள்ளன.
இன்று (18) அதிகாலை 3.30 மணியளவில் கொலன்னாவ பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால், இன்று (18) காலை கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை பயணிக்கவிருந்த ரயில் சேவை இரத்துச் செய்யப்பட்டது.
மட்டக்களப்பு-கொழும்பு பிரதான பாதையின் ரயில் சேவைகள் தற்போது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.
மீட்பு பணிகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.