லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை தீர்க்க போலிவூட் நடிகர் சல்மான் கானிடம் 5 கோடி இந்திய ரூபா கோரி வாட்ஸ்அப் மூலம் வியாழக்கிழமை (17) மிரட்டல் செய்தி வந்ததாக மும்பை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
மும்பை காவல்துறையை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்திச் சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அந்த மிரட்டல் செய்தியில்,
இந்த விடயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம், சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால், லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வர விரும்பினால், அவர் 5 கோடி ரூபா கொடுக்க வேண்டும்.
பணம் கொடுக்கவில்லை என்றால், சல்மான் கானின் நிலை. பாபா சித்திக்கை விட மோசமாக இருக்கும் – என கூறப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மும்பை பொலிஸார் தற்சமயம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
புதிய மிரட்டல் செய்தியை அடுத்து நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக வியாழக்கிழமை, சல்மான் கானைக் கொல்ல சதி செய்ததாகக் கூறப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஒருவரை நவி மும்பை பொலிஸார் கைது செய்தனர்.
இந்த ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதி, சல்மான் கானைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக அடையாளம் காணப்பட்ட 18 குற்றவாளிகள் மற்றும் பிஷ்னோய் கும்பலின் மற்றவர்கள் மீது நவி மும்பை பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மும்பையில் உள்ள நடிகரின் பாந்த்ரா இல்லத்திற்கு வெளியே பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து இந்த சம்பவம் அரங்கேறியது.