யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் மின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அனலைதீவு 05ஆம் வட்டாரத்தை சேர்ந்த நடராசா துஷ்யந்தன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.
ஐயனார் கோவிலில் பாடலை ஒலிபரப்பு செய்வதற்கு மின் இணைப்புக்களை வழங்கிய வேளை மின்சாரம் தாக்கியுள்ளது. ஆலயத்தில் நின்றவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் , அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் அறிக்யைில் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.