நேற்று (18) இரவு 11.30 மணியளவில் சட்டவிரோத போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற பயணி ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
35 வயதுடைய இந்த பயணி தெமட்டகொட பிரதேசத்தில் வசிப்பவர்.
மலேசியன் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான MH 179 விமானத்தில் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்காவுக்கு வந்த பயணியிடம் தேயிலை இலைகள் அடங்கிய பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10.197 கிலோகிராம் ஐஸ் வகை போதைப்பொருளை சுங்கப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த போதைப்பொருளின் பெறுமதி 250 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த நபர் மற்றும் போதைப்பொருள் தொகை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.