கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னேரியா – ரொட்டவௌ பகுதியில் காட்டு யானைகள் மீது தொடருந்து ஒன்று மோதியதை அடுத்து சேதமடைந்த, தொடருந்து மார்க்கத்தைச் சீர் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
அதேநேரம் இந்த விபத்து தொடர்பில் இரு வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தி, குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.