அறுகம்பை வளை குடாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எதிரான தாக்குதல் அச்சுறுத்தலை அடுத்து, இலங்கையிலுள்ள ரஷ்ய பிரஜைகளை அவதானமாக இருக்குமாறும், அதிக மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கொழும்பில் அமைந்துள்ள ரஷ்ய தூதகரம் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், ஐக்கிய இராச்சியம் அறுகம்பை வளைகுடா பகுதியில் சாத்தியமான அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்க தூதரகத்தால் வெளியிடப்பட்ட அண்மைய பயண எச்சரிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், இலங்கையில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு, அறுகம் வளைகுடா பகுதியில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவலை மேற்கோள் காட்டி, மறு அறிவிப்பு வரும் வரை அறுகம் வளைகுடா பகுதியை தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.
அறுகம்பை வளைகுடா பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையிலேயே ரஷ்ய தூதகரத்தின் மேற்கண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.