அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான கமலா ஹாரிஸின் ஆதரவுக் குழுவுக்கு பில் கேட்ஸ், தனிப்பட்ட முறையில் 50 மில்லியன் டொலர்களை நன்கொடையை வழங்கியுள்ளார்.
பல தசாப்தங்களாக அரசியலில் இருந்து விலகியிருந்த பில்லியனரின் இந்த நடவடிக்கை 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குறிப்பிடத்தக்க வகையிலான அவரின் ஆர்வத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
தி நியூயார்க் டைம்ஸின் கூற்றுப்படி,
மைக்ரோசாப்ட் நிறுவனர், கமலா ஹாரிஸை நேரடியாக ஆதரிக்கவில்லை, ஆனால் ஹாரிஸின் ஜனாதிபதி பதவிக்கு ஆதரவளிக்கும் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்திற்கு பணத்தை நன்கொடையாக வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு பதிலளித்த பில் கேட்ஸ்,
இந்தத் தேர்தல் வித்தியாசமானது என்பதால் அமெரிக்கத் தேர்தலில் ஆர்வம் காட்ட முடிவு செய்ததாக கூறியுள்ளார்.
இதனிடையே, ஃபோர்ப்ஸின் அறிக்கையின்படி, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பை விட அதிகமான பில்லியனர் நன்கொடையாளர்கள் உள்ளனர்.
சுமார் 81 பில்லியனர்கள் ஹாரிஸை ஆதரிப்பதாகவும், 50 பேர் ட்ரம்பை ஆதரிப்பதாகவும் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.