11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தம்மை பிரதிவாதியாக பெயரிட சட்டமா அதிபரின் தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொடவினால் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது .
இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தம்மை பிரதிவாதியாக பெயரிட சட்டமா அதிபரின் தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என முன்னாள் கடற்படைத் தளபதி மேன்முறையீட்டு நீதிமன்றில் சமர்ப்பித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், வசந்த கர்ணகொடவுக்கு எதிரான மூவரடங்கிய உயர் நீதிமன்றக் குழாம் முன்னிலையில் விசாரணை நடத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை அண்மையில் பிறப்பித்திருந்தது.
இதன்படி, குறித்த மனுவை விசாரிப்பதற்காக மேன்முறையீட்டு தலைமை நீதிபதியினால் ஐந்து பேர் கொண்ட மேன்முறையீட்டு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது