தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று(24) நெல்லியடி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடி பகுதியில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.