தென்கிழக்கு லெபனானில் பத்திரிகையாளர்கள் வசிக்கும் கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் மூன்று ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறைந்தது ஏழு ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பயன்படுத்தும் ஹஸ்பயாவில் அமைந்துள்ள ஒரு விருந்தினர் மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
லெபனானின் தகவல் தொடர்பு அமைச்சர், இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும், இது ஒரு “போர்க்குற்றம்” என்றும் விபரித்தார்.
எனினும், தாக்குதல் குறித்து இஸ்ரேல் இராணுவம் இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை.
தாக்குதலில் மேலும் மூவர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.