தம்புள்ளை நகரத்திலும், தம்புள்ளையைச் சுற்றியுள்ள சுற்றுலாப் பயணிகள் கூடும் இடங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை முதல் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரோஹண கமகே தெரிவித்தார்.
தம்புள்ளை ரஜமகாவிகாரை, தம்புள்ளை உயன்வத்தை ரஜமகாவிகாரை, அரேவுல, இனாமலுவ, தம்புள்ளை உள்ளிட்ட சுற்றுலா விடுதிகள் அமைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.