இன்று (31) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமாக வளிமண்டல நிலை காணப்படுகின்றது.
மாலை அல்லது இரவு வேளையில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காற்று:
காற்று மேற்கு முதல் தென்மேற்கு திசையில் வீசும் மற்றும் காற்றின் வேகம் மணிக்கு (20-30) கி.மீ. ஆக காணப்படும்.
கடல் நிலை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது மிதமாக இருக்கும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.