ஓரிகான் மாநிலத்திலுள்ள ஒரு பன்றிக்கு H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வேளாண் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் பன்றிகளிடையே குறித்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பம் ஆகும்.
எனினும், நாட்டின் பன்றி இறைச்சி விநியோகத்தின் பாதுகாப்பு குறித்து எந்த கவலையும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐந்து பன்றிகள் உட்பட கோழி மற்றும் கால்நடைகளின் கலவையைக் கொண்ட ஒரேகானின் க்ரூக் கவுண்டியில் அமைந்துள்ள பண்ணை ஒன்றிலேயே H5N1 வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தற்சமயம் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் செம்மறி ஆடுகளும் உள்ளன.
நாடு முழுவதும் உள்ள கறவை மாடுகளுக்கு H5N1 வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்த தகவல் வந்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கறவை மாடுகளில் H5N1 அடையாளம் காணப்பட்ட போது, விவசாயம் மற்றும் உணவு விநியோகத்தில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக பன்றிகளுக்கு வைரஸ் பரவும் சாத்தியம் குறித்து அதிகாரிகள் கவலைப்பட்டமையும் குறிப்படத்தக்கது.