பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டாவுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் பிலியந்தலை பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 285 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
41 வயதான ஓமல்பகே தம்மிக்க சமன் குமார மற்றும் 53 வயதான கங்கணம் ஆராச்சிகே சுஜீவ ஆகியோரே கைதானவர்கள் ஆவர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் (STF) பிலியந்தலையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர்களிடம் 7.415 கிலோ ஹெரோயின் மற்றும் 1.017 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றையும் லொறி ஒன்றையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு (PNB) மேற்கொண்டு வருகிறது.