முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று (31) பிற்பகல் கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொடை மிரிஹானையில் உள்ள அவரது மனைவியில் இல்லத்தில் இலக்கத் தகடு இல்லாத வாகனம் ஒன்று கண்டுபிடிகக்ப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கடந்த வாரம் மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த வாகனம் மிரிஹானவில் உள்ள முன்னாள் அமைச்சரின் மனைவியின் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.