அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (01) சற்று அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 288.59 ரூபாவாகவும், 297.64 ரூபாவாகவும் உள்ளது.
கடந்த புதன்கிழமை ( ஒக். 30) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 289.06 ரூபாவாகவும், 298.14 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று உயர்ந்துள்ளது.