நாட்டில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பான தரவுகள் அடங்கிய அறிக்கை இன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்த அறிக்கையில் 17 மாவட்டங்களில் உள்ள அரிசி மற்றும் நெல் இருப்பு குறித்த தகவல்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்தந்த மாவட்டங்களில் உள்ள பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களுக்கு சொந்தமான நெல் மற்றும் அரிசி இருப்பு குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை கணக்கெடுப்பு நடத்தியது.
அந்த தரவு அறிக்கைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
அண்மையில் மொனராகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, ‘அரிசி அல்லது நெல் விலையில் மீண்டும் நெருக்கடி ஏற்படாது என அவர் தெரிவித்திருந்தார்
இதேவேளை, சில சந்தைகளில் அரிசி விலை இன்னும் கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.