பிரமிட் திட்டத்தில் 1800 மில்லியன் ரூபா மோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
52 வயதுடைய சந்தேக நபர், மலேசியாவில் இருந்து இன்று (08) காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலயைத்தை வந்தடைந்த போது கைது செய்யப்பட்டார்.
அவர், பிரமிட் திட்டம் மூலம் மக்களிடம் பணத்தை மோசடி செய்து ஒரு வருடத்திற்கு முன்னர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நபரை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்த அவரது மனைவியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.